என்னவளே என்னவளே/டாகடர் பாலசாண்டில்யன்

என்னவளே நீயில்லாது நானும் வாழ முடியுமா?
உந்தன் எண்ணம் உந்தன் வண்ணம் இழக்கத் தான் முடியுமா?
என்னவளே என்னவளே

நீயின்றி எந்தன் வாழ்வு நீரில்லாத நதி தான்
நீ தான் எந்தன் ஜீவநாடி என்ன செய்ய விதி தான்

தூக்கமின்றி பசியுமின்றி துடிப்பதென்ன ஞாயம்
தூரம் வந்து தடுக்கிறதென் தூய்மையான நேயம்

வா சகி புரிந்து கொள் அன்பினது தாபம்
வாசமாக சுவாசமாக விளங்கும் என் தியாகம்

என்னவளே…
என்னவளே நீயில்லாது….

2 Comments on “என்னவளே என்னவளே/டாகடர் பாலசாண்டில்யன்”

Comments are closed.