
96வது கவிதை நேசிப்பு மெய்நிகர்
கூடுகையில் வாசித்தது.
வாழும் வீட்டுக்கு அடுத்த மனை
காலியாகக்கிடக்கிறது
கள்ளவிழியாய்க்குப்பை கொட்ட
காலிமனை போல்
வேறு வசதி அகப்படுமா.
நீலமாமரம் ஒன்றுண்டு
குட்டைத் தென்னையும் வளர்ந்திருக்கு
தெருவில் வசிப்போர் ஓசியிலே
மாங்காய்ப்பறித்துப்
போவார்கள்
மாமிகள் எடுப்பார் மாவடுவை
அப்பாடா போதுமென்பார்
வசிக்கும் நகரில்
சவம் விழலாம்
பச்சை மட்டைக்கு
இத்தென்னை நீட்டும் உடனே நேசக்கரம்
மனையின் முதலாளி என்னிடமோ
ஆண்டுக்கொரு முறை விசாரிப்பார்
ஆராயிரம் ரூபாய் என்று வரும்
சதுரஅடி மண்ணின் விலை.
