இசைவானில் வாணி/முருகு

ஏழு ஸ்வரங்களும் இன்று
ஈன ஸ்வரத்தில் அழுமம்மா…

நாதமெனும் கோவிலில் இன்று
ஞான விளக்கு அணைந்ததம்மா…

மன்னன் மயங்கிய மல்லிகை
மலராதம்மா இன்றொரு நாள்…

கீதங்களெல்லாம் இன்று ஏங்கும்
கீதங்கள் தான் எங்களுக்குள்…

ஆனாலும்

நீ பாடிக் கொண்டேயிருப்பாய்!!!
நித்தமும் இசை வானில் வாணியாய்…