
கறுப்பு நிறத் தெரு நாய்
எதிர் வீட்டு மாடியில்
எஜமானி மடியில்
ஏத்தமாய் அமர்ந்திருந்த
பமரேனியனைப் பார்த்து
பரிதாபமாய் விட்டது
ஏக்க பெருமூச்சு!
இவனுக்கு அமைந்த
வாழ்வைப் பார் !

தெருவில் மறுநாள்
எஜமானியோடு சங்கிலியியுடன்
நடை பயிற்சி
பமரேனியனுக்கு!
தெரு நாய்க் கறுப்பன்
ஜோடியுடன் ஜாலியாக
அங்கும் இங்கும்
ஆடுவதைக் கண்டு
பொங்கியது பொறாமை !
இருந்தால் இவனைப் போல
இருக்க வேண்டும் !!!!
