
இனி
என் துக்கங்கள்
என்னுடையவை மட்டும்தான்
என் மகிழ்ச்சிகள்
என்னுடையவை மட்டும்தான்
எப்போதாவது
யாரிடமாவது அதை
பகிர்ந்துகொள்ளத் தோன்றும்
அப்போது அவற்றை
தானியங்களாக்கி
குருவிகளுக்குத் தருவேன்
ஒரு சிறிய புழுவாக்கி
மீன்களுக்கு கொடுப்பேன்
12.2.2023
காலை 9.32
