
தரம்வீர் பாரதி இந்தியில் எழுதிய நாடகம் ‘அந்தா யுக்’(குருட்டு யுகம்’/இருண்ட யுகம்). 1953ஆம் ஆண்டு எழுதப்பட்டு பலமுறை மேடையேற்றப்பட்ட மிகப் புகழ் பெற்ற நாடகம். இந்திய நாடக உலகில் இன்றுவரை மிகச் சிறந்த இயக்குனராகக் கருதப்படும், ’இப்ராஹிம் அல்காஷி’ டில்லியில், பழைய டில்லிக் கோட்டையின் இடிபாடுகளின் இடையே இந்த நாடகத்தை அரங்கேற்றியது வரலாறு. கோட்டையின் இடிபாடுகளின் பின்னணி நாடகத்தின் பேசுபொருளுக்கு மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். இந்த நூலின் அட்டையில் அந்தப் பின்னணியின் காட்சி இருக்கிறது. ‘கடந்த ஆயிரம் ஆண்டுகளில் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாடகங்களில் ஒன்று இது. மொழியாக்கத்தில் மிகச் சிறந்த முன்னுதாரணம்’ என்று கிரீஷ் கர்னாட் நாடகத்தைப் பற்றியும், மொழியாக்கத்தின் தரத்தைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.
இந்தக் காலக்கட்டத்தில், அந்த நாடகத்தின் பெயர் அடிக்கடி ஞாபகம் வந்து கொண்டிருந்தது. காரணம் சொல்ல வேண்டியதில்லை. இதுவும் ஒரு குருட்டு யுகம் அல்லது இருண்ட யுகம்.
ஏன் ‘மீண்டும் குருட்டு யுகம்? மொழியாக்கப் செய்த அலோக் பல்லா (அவர் மேற்கத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் என்று தெரிகிறது) எழுதிய முன்னுரையின் தலைப்பே நம் காலத்துக்குப் பொருத்தமானது. (அட்டூழியங்களின் காலத்தில் புனிதங்களைக் காப்பாற்றுவது – Defending the Sacred in the Age of Atrocities). முன்னுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார் ‘அரசியல் பழிவாங்கல், துயரங்களினூடே இயலாமை, கருணையின் பொருள், அநீதி நிகழும் போது அறத்தைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் அதைத் தடுக்க முயலாதது, அறத்தின் அழிவை, சிதைவை நோக்கி நம்மைத் நகர்த்தும் கடவுள்களின் பொறுப்பு இவை விவாதங்களின் மையப் புள்ளியாக இருந்தன’. அவர் ’அந்தா யுக்’ நாடகத்தை கற்பிக்கும் போது, பெரும்பாலான மாணவர்கள் காந்தாரியின் மீது பரிதாபம் கொண்டனர். எல்லோரும் ஒரே குரலில் கிருஷ்ணனின் பாத்திரத்தைக் கண்டனம் செய்தனர். கிருஷ்ணன் அவர்களைச் சஞ்சலப்படுத்தினான் – அறம், நீதி இவற்றின் சார்பாக கடவுளைப் போல் நடந்து கொண்டிருக்க வேண்டிய அவன், ஓட்டுக்களைப் பெறுவதற்காக நமது தேவைகளை, விருப்பங்களை, உரிமைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வேஷமிட்டு, நம்மைத் துண்டாடுகிற அரசியல்வாதியாக நடந்து கொண்டான். பாண்டவர்களைப் பழிவாங்குவதற்காக, காந்தாரி அஸ்வத்தாமனை ஒருகருவியாக, வெல்ல முடியாதவாக ஆக்கியது சரி என்று நினைத்தனர். எல்லா வல்லமையும் கொண்டிருந்ததால், கிருஷ்ணன் தனது பொறுப்புகளை உணர்ந்திருக்க வேண்டும். அதன் மூலம் பாண்டவர்களையும் கௌரவர்களையும் போரின் பேரழிவிலிருந்து காப்பாற்றி அவர்கள் நீதிமான்களாக மாற அவன் உதவியிருக்க வேண்டும்’.
’அந்தா யுக்’ நாடகம் மகாபாரத யுத்தத்தின் பதினெட்டாவது (கடைசி) நாளில் மாலையில் தொடங்கி கிருஷ்ணன் புனிதயாத்திரை போய் மரணமடைவதில் முடிவடைகிறது. தலைப்பிலிருந்து பல வசனங்கள் நமது காலத்து அரசியல்வாதிகள் பேசுவது போல் இருந்தது வியப்பாக இருந்தது. வெற்றியும் தோல்வியும் வெறும் பெயர்கள். போரின் முடிவில் அழிவது இருதரப்பினரும்தான் என்பது மிக அழுத்தமாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. எல்லா வகையான அறமீறல்களும் வன்முறைகளும் போரில் நேரத்திற்குத் தகுந்தாற்போல் நியாயப்படுத்தப்படுகிறது. அவற்றின் விளைவு பேரழிவு. இருண்ட காலம் பெரும் போர்வையைப் போல் எல்லோரையும் சூழ்ந்து கொள்கிறது.
ஒரு கட்டத்தில் கிருஷ்ணனைப் பார்த்து அவனுடைய சகோதரன் பலராமன் சொல்கிறான் ‘ நீ என்ன சொன்னாலும் சரி, இன்று பீமன் செய்தது தர்மத்தை மீறிவதாகும். அவனுடைய தாக்குதல் வஞ்சகமானது. பாண்டவர்கள் நமக்குச் சொந்தமானவர்கள் ஆனால், கௌரவர்கள் என்ன நமது எதிரிகளா? நான் பீமனிடம் இன்று நேருக்கு நேர் மோதியிருப்பேன். நீதான் என்னைத் தடுத்தாய். குழந்தைப் பருவத்திலிருந்து உன்னை அறிவேன். நீ எப்போதுமே கொள்கையற்ற கேடிப்பயல்’. கிருஷ்ணன் பயமுறுத்துகிறவனாகவோ, நடுங்க வைக்கிறவனாகவோ இந்த நாடகத்தில் தோன்றவில்லை. அவனைத் திட்டலாம், கண்டிக்கலாம், நேசிக்கலாம், தொழலாம், கைவிடலாம், கொல்லவும் செய்யலாம். அவன் நாடகத்தில் தோன்றுவதோ குரல் கொடுப்பதோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தாரி ஒரு புனிதரிடம் சொல்கிறாள் – நீங்கள் சொல்லியிருந்தீர்கள் ‘துரியோதனன் வெற்றி பெறுவான்’
”புனிதர்:- நான் பொய்யான தேவதூதன் இந்தக் கணத்தில் என் வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை.
பல பொய்யான ஆருடங்கள், நொறுங்கிய கனவுகள், பாதி உண்மைகள் கௌரவர்களின் நகரத்தில் ஒவ்வொரு மூலையிலும் உடைந்து சிதறிக் கிடக்கின்றன.
காந்தாரி அந்தக் கனவுகளையெல்லாம் அக்கறையோடு வளர்த்துக் கொண்டிருப்பது துரதிருஷ்டமானது.”
இப்படி அவன் சொன்ன பிறகும் காந்தாரி சொல்கிறாள்
“வெற்றி நமதே. எனக்கு நம்பிக்கையிருக்கிறது வெற்றி நமதே. எனது நம்பிக்கைகள் பொய்யானதாக, குருட்டுத்தனமானதாக இருக்கலாம். ஆனால் துரியோதனன் வெற்றி பெறுவான்.”
போரில் கௌரவர்கள் தோல்வியடைந்ததும், அதை நேரடியாக வர்ணனை செய்த, சஞ்சயனின் திறன் முடிவடைந்து விடுகிறது. அவன் வழிதெரியாமல் திணறுகிறான். சத்யகி அவனை வெட்ட வரும்போது வியாசன் சொல்கிறான் ‘சஞ்சயனுக்குச் சாவே கிடையாது. அவன் நிரந்தரமானவன்.”
வியாசன் சஞ்சயனைத் சபித்திருக்கிறான் “ நீ பேரிடர்களிலிருந்து, வெள்ளத்திலிருந்து, புரட்சிகளிலிருந்து போரின் பேரழிவிலிருந்து தப்பித்து விடுவாய். உண்மைகளைச் சொல்ல ஒருவன் வேண்டுமல்லவா?.
சஞ்சயன் நாடகத்தில் கேட்கிறான் “குருடர்களிடம் நான் எப்படி உண்மையைச் சொல்ல முடியும்.”
யுதிஷ்டிரனும், விதுரனும் சென்ற ’உண்மையின் பாதையில் புனிதப் பயணம்’ சரியானது என்று அலோக் பல்லா சொல்கிறார். நாடகத்தின் முதல் அங்கத்தில், உண்மையின் வழிச் செல்லாத நாடுகளின் தலைவிதி குறித்து அவனுடைய அறிஞர்கள் போர் மூளுவதற்குப் பல ஆண்டுகள் முன்னால் சொன்னதை விதுரன் திருதராஷ்டிரனுக்கு நினைவூட்டுகிறான்:-
திருதராஷ்டிரன்: விதுரா, வாழ்க்கையில் முதல் முறையாக நான் பயப்படுகிறேன்.
விதுரன் : பயமா? உனக்கு இன்று ஏற்பட்டிருக்கிற பயம், மற்றவர்களைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே பிடித்துவிட்டது.
திரு: நீ ஏன் என்னை முன்னரே எச்சரிக்கவில்லை?
விது:பீமன் எச்சரித்தான். துரோணார்சாரியும் சொன்னான்
இதே அவையில் கிருஷ்ணனும் இப்படி அறிவுறித்தினான் :-
‘நெறிமுறைகளை மீறாதே. அப்படி மீறினால் அது மலைப்பாம்பைப் போல கௌரவரின் கழுத்திலே சுருண்டு சிறு செடியைப் போலே இறுக்கிவிடும்.’
அதற்குத் திருத ராஷ்டிரன் சொல்கிறான் ‘விதுரா புரிந்துகொள்ள முயற்சி செய். நான் பிறவியிலேயே குருடன். யதார்த்த உலகை எப்படி நான் புரிந்துகொள்ள முடியும். அதன் சமூக நியதிகளை எப்படிக் கண்டு கொள்வேன்?’
விதுரன்: ‘உன்னால் முடிந்திருக்கும். குருடாக இருந்தாலும் இந்த உலகை நீ ஏற்றுக் கொண்டிருக்கிறாய். அது போலத்தான்…….
திரு: இருளின் ஆழத்திலிருந்து என்னுடைய ஆசைகள், கனவுகளிலிருந்து ஒரு கற்பனா உலகைப் புனைந்திருக்கிறேன். என்னுடைய காதல், வெறுப்பு, என்னுடைய அறம், எல்லாம் அந்த வினோத உலகத்திலிருந்து பரிணமித்தவை. என் நல்லறத்துக்கு வேறு எந்த விதிகளும் இல்லை.
அறம் என்பது தொந்தரவு வரும் நேரத்தில் தேவைப்படும் போது அழைத்தால் பயன்படுவதற்கும், மற்ற நேரங்களில் மறந்து விடுவதற்கும், அது நமக்குச் சேவகன் அல்ல என்று விதுரன் வற்புறுத்துகிறான்.
இரண்டு அரண்மனைக் காவல்காரர்களின் உரையாடல் முக்கியமானது. ’நம்மை யார் காப்பார்கள்? நமக்கு இழப்பதற்கு ஒருநாளும் கௌரவம் இருந்ததில்லை. நம்பிக்கை இல்லாததால், அவநம்பிக்கையும் நமக்கு இருந்ததில்லை. நாம் துயரத்தையும் வலியையும் உணர்ந்ததே இல்லை. நமது வெறுமையான வாழ்க்கையை இந்த வெறுமையான வராண்டாக்களிலேயே கழித்தோம். ஏனென்றால் நாம் அடிமைகள் தான். குருட்டு மன்னனின் ஆணைகளைக் நிறைவேற்றினோம். நமக்கு எந்தக் கருத்தும் இல்லை. எந்த வாய்ப்புக்களும் இல்லை’.
பீமன் அறத்தை மீறி துரியோதனனைக் கொல்கிறான்.
கவிதைப் பாணியில் இந்தியில் புனையப்பட்ட நாடகத்தில் நடுநடுவில், (பிரெக்ட் பாணியில்) கோரஸாகப் பாடல்கள் வருகின்றன.
முதல்காட்சியில் சூத்திரதாரியின் குரல் இது:
’இரண்டு தரப்புகளும் போரின் விதிமுறைகளி மீறிவிட்டன
உடைத்துச் சிதறடித்துவிட்டன
பாண்டவர்களை விட, கௌரவர்கள் கொஞ்சம் அதிகமாக.
எப்போது இந்த ரத்தக் களரி முடிவடையும்?
இந்த வினோதமான போரில் இரண்டு தரப்புகளும் தோல்வியடையச் சபிக்கப்பட்டிருக்கின்றன
குருட்டுத்தனம் தான் ஆட்சி செய்கிறது
அறிவு அல்ல
குருட்டுத்தனம்தான் கடைசியில் மிஞ்சும்
குருட்டுப் பயம், குருட்டுக் காதல்
குருட்டு அதிகாரம், குருட்டு நீதி
கடைசியில் வென்று நிலைக்கும்
கடைசிப் பாடல் முக்கியமானது :-
அந்த நாளில் இருண்ட காலம் உலகின் மீது கவிகின்றது\
அதற்கு முடிவே இல்லை மீண்டும் மீண்டும் திரும்ப வருகிறது
இருண்ட காலம் நமது ஆதமாக்களுக்குள் கசிந்து விட்டது
ஆனால் இன்னொன்றும் உண்மை
சிறு விதையைப் போல மனித மனதில் எங்கோ புதைந்திருக்கிறது
ஒரு சுதந்திர தாகம், வீரம், புதியதாக ஒன்றை உருவாக்கும் கற்பனைத் திறன்
ஒருவர் கூட விதிவிலக்கின்றி நம் ஒவ்வொருவர் உள்ளும் புதைந்திருக்கிறது
அது வாழ்க்கையில் தினந்தினம்,
நமது கடமையாக
கௌரவமாக,
சுதந்திரமாக,
நன்னடத்தையாக
வளர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தச் சிறிய விதைதான் நம்மைப்
பாதி உண்மைகளை,
பெரும் போர்களை,
கண்டு பயப்பட வைக்கிறது
அதுதான்
மானிடத்தின் எதிர்காலத்தை,
குருட்டுச் சந்தேகங்கள்,
அடிமைத்தனம்,
தோல்வி இவற்றிலிருந்து
எப்போதும் காப்பாற்றுகிறது’.
‘Andha yug’ again
Dharm Vir Bharati wrote the play ‘Andha Yug’ in 1953. It was staged many times and attained cult status. It was also staged in Delhi’s old fort by Ibrahim Alkazi who is still considered one of the best. Dilapidated old fort was the appropriate stage for this play as it speaks the destruction at the end of Mahabharata war. The place perfectly matched with the subject of the play. A photo of this play with the background of old fort decorates the cover. Girish Karnard said “This is one of the great Indian plays of the last millennium and in Ashok Bhalla, it has found an ideal translator.
Name of this play comes to mind often in this age. There is no need to tell the reason for this is also a ‘Blind Age’ ‘Andha Yug’.
Why “Andha Yug’ again”? The translator Shri Ashok Bhalla (He was a professor in a western University). This is the title of the foreward written by Shri Ashok Bhalla. Very suitable tile for this age. “Defending the Sacred in the Age of Atrocitieis”(2005). In his forward, he states that “ Focus of his discussions with his students was about ‘the politics of revenge, impotence of grief, the meaning of karuna, the failure of the morally responsible will to intervene in acts of violation, and the responsibility of the gods in leading us to moral dereliction and decay”. Nearly every student pitied Gandhari, and there was unanimous condemnation of Krishna. Krishna made them uncomfortable – He should have behaved more like a dissembling politician pretending to fulfil our needs and wishes, rights and demands so as to win our votes, instead of acting like a god on behalf of morality and justice. Gandhari, they felt was right in making Ashwathama the invincible instrument of her revenge against the4 Pandavas. Krishna’s omnipotence should have alerted him to his responsibilities and he should have helped the Pandavas and Kauravas evade a catastrophic war by transforming them into moral visionaries”.
‘Andha Yug’ starts in the evening of 18th day of Mahabharata war and ends in Krishna’s pilgrimage and death. It was a surprise that the title of the play and many dialogues reminded me of the speeches of contemporary politicians. The play shows that victory and defeat are only words and that finally both sides are destroyed. All violations of morality and violence are justified as per requirements the hour. Consequence of this is complete destruction. The dark age shrouds everyone like blanket.
In this play, Balaram tells his brother Krishna that “Say what you like krishna, but what Bhima did today violated dharma. His attack ws an act of betrayal. The Pandavas are related to us. But are the Kauravas our enemies? I would have confronted Bhima today. But you stopped me. I have known you since childhood. You have always been an unprincipled rougue!”. Krishna கிருஷ்ணன்
