ஆதலினால்…./ எஸ் வி வேணுகோபாலன்

ஒரு பேரிடர் எச்சரிக்கை
போன்ற
பதட்டம் கூடுவது தெரிகிறது
சிலருக்கு

ஒவ்வாமை என்று வருவோர்
வழக்கம் போலவே
இந்த மாதம் அதிகம்
என்கின்றனர் மருத்துவர்கள்

விலங்கு நல வாரியத்தின்
அறிவிப்பில்
விழித்துக் கொண்ட
பறவை உலகம்
இன்னும் மும்முரமாக
வலம் வந்து கொண்டிருக்கிறது
இணை இணையாக!

கடைசி நிமிடத்தில்
அதிர்ஷ்ட வசமாகத்
தப்பிய பசுக்கள்
தின்னக் காத்திருக்கின்றன
வெறுப்புச் சுவரொட்டிகளை…

5 Comments on “ஆதலினால்…./ எஸ் வி வேணுகோபாலன்”

  1. “ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்கின்றோம்.

    இன்னும் திறந்து வெளிப்படையாய்த் தைரியமாய் மனித இயற்கையையும் சுதந்திரத்தையும் சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும் தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்வது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித் தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் தான் சொல்ல வேண்டும்.” – பெரியார் ( 18.01.1931 – குடியரசு தலையங்கத்திலிருந்து)”

    – கழகங்களின் பிதாமகர் திருவாய் மலர்ந்து அருளியதை தோழர் ‘கவிதை’ வடிவில் சொல்லியிருக்கிறார்.. பாராட்டுக்கள்..

    நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்
    என்றும் என் தோள் பிரிபு அறி யலரே!
    தாமரைத் தண் தாது ஊதி மீ மிசைச்
    சாந்தின் தொடுத்த திம்தேன் போலப்
    புரைய மன்ற புரையோர் கேண்மை;
    நீர் இன்று அமையா உலகம் போலத்
    தம் இன்று அமையா நம் நயந்து அருளி
    நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
    சிறுமை உறுபவோ செய்பு அறி யலரே?
    (நற்றிணை—1)

    தோழர்களுக்கு இந்தக் கலாச்சாரமெல்லாம் பற்றி கவலையில்லை.. முதலாளிகள் கைகாட்டுகிற ஆளை அடிக்க வேண்டும்.. அவர்கள் செய்வதைக் கண்டிக்க வேண்டும்.. அதைச் செவ்வனே செய்கிறார்கள்.. வாழ்த்துகள்..

  2. ஆம் கவிஞர், நானும் கவனித்தேன் காகங்களின் மொட்டை மாடி கூட்டங்கள் அதிக நெரிசலோடு. Climate change பற்றி அழகான கவிதை.

Comments are closed.