97 கவிதை நேசிப்பு மெய்நிகர்க் கூட்டத்தில்
வாசித்த கவிதை

நாதன் திருக்கை
நாத மன்ன திரு கை
பேத மாவெளியில்
பேதை மன வலியில்
மேஷ விதானத்து
மேவின துதிதியில் லயித்து
பூத கணங்களாய்ப் பெயர
பூ கணத் திங்களாய்ப் பெய்ய
முதிரும் கானகத் தருக்கை
முத்தி தரும் கணத்தின் கை
முகிழும் பத வினை நாடி
முழுதான பர விதைப்படி
நள்ளும் கோலத்து கூட
நாளும் காலமது கடக்க
பகரா பருவம் மௌனித்து
பக்கம் வரும் மோனமது
உத்திரச் சாமம் சீண்டி
உதிரச் சாபம் சீர்மண்டி
தனதாய மனமதில்
தன் தீய குணத்தில்
ஆறும் ஆகம புலத்து
ஆறு கமலத்து புவியிது
