சர்ரியலிஸம்/முருகு

97 கவிதை நேசிப்பு மெய்நிகர்க் கூட்டத்தில்
வாசித்த கவிதை

இது என்ன சர்ரியலிஸம்?
இதுவரை இல்லா புது இஸம்…

“மெய்த்திரிபியல்வாத”மாம்!
மென்பொருள் அகராதிப் படி…

ஆங்கிலமும் புரியவில்லை…
அதன்பொருளும் புரியவில்லை!

“நடப்பியல் வாதம்” என்பதேதோ
நம்பும் படியாக இருக்கிறது…

புரிகிறது… புரிந்து அதன் வழி
புனையும் படியும் இருக்கிறது…

நடப்பியல் நிகழ்வுகள்
நடப்பியல்கள் தான்…

நகாசு வேலைகள் எவ்வளவு
நயந்து செய்யினும்…

அவை புனைவுகள் ஆகா…
அப்பட்டமான நடப்பியல் தான்…

உள்ளதை உள்ளபடி…
உள்ளத்தில் உள்ளபடி…

அப்படியே சொல்லடா மானிடா…
அகிலம் உய்யட்டும் ஆரவாரம் ஏனடா?

சர்ரியலிஸம் என்பது இது தான்!
சத்தியம் என்பதுவும் இது தான்!!

சர்ரியலிஸப் படைப்புகள்…
சற்றும் ஒப்பனையில்லா…

சத்தியப் படைப்புகள் மட்டுமல்ல…
அசாத்தியப் படைப்புகள்…ஆமேன்