தினசரி விருட்சம் இணைய இதழ் 4000 பதிவுகளைத் தாண்டி விட்டேன்/அழகியசிங்கர்

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

தினசரி விருட்சம் என்ற தலைப்பில் ஓர் இணைய இதழைக் கொண்டு வந்துள்ளேன். இந்த இணைய இதழ் 24.09.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இன்று வரை 4000 பதிவுக்கு மேலாக வெற்றிகரமாக வெளிப்படுத்தி உள்ளேன்.

இந்தப் பதிவுகளை முகநூல் மூலமாகவும், புலனங்கள் மூலமாகவும், இ மெயில் மூலமாகவும் எடுத்துப் பதிவு செய்கிறேன்.

நண்பர்கள் ஒத்துழைப்புடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.

தினசரி நடத்தும் விருட்சம் இணைய இதழுக்கு உங்கள் ஒத்துழைப்பு அவசியம்.

இது ஒரு பல்சுவை இதழ்.

ஆன்மிகம், வாழ்க்கை அனுபவம், பயணக் கட்டுரை , தினசரி செய்தி, பத்திரிகைக் கதைகள், தீவிர இலக்கியக் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், காணொளி பதிவுகள் என்று
பலவற்றை வெற்றிகரமாகப் பதிவு செய்து வருகிறேன்.

கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வாழ்க்கை அனுபவங்கள், பயண அனுபவங்கள் என்று உங்கள் பதிவுகளை இதன் மூலம் வெளிப்படுத்தலாம்.

எந்தவித தாமதமின்றி தினசரி இணைய இதழில் பதிவு செய்வதோடல்லாமல் சிறந்தவற்றை அச்சிதழிலும் பதிவு செய்வேன்.

தினசரி விருட்சம் இணைய இதழைப் பார்க்க

daily.navinavirutcham.in

என்று சொடுக்கவும்.

தினசரி விருட்சம் இணைய இதழில் பங்குக் கொள்ள

editorvirutcham@gmail.com

தொடர்பு கொள்ளவும்.

2 Comments on “தினசரி விருட்சம் இணைய இதழ் 4000 பதிவுகளைத் தாண்டி விட்டேன்/அழகியசிங்கர்”

  1. பாராட்டுகளும், வாழ்த்துகளும் !!!!. ஊருக்கு நூறு பேர் வருவது அல்லது நூறு வாசகர்கள் கிடைப்பது அரிதான விஷயம் அப்போதும் இப்போதும் ஒரு நல்ல இலக்கிய இதழுக்கு அல்லது நிகழ்வுக்கு. மின்னிதழ் வரும் காலத்தில் படிக்கப் படும் இதழாக இருக்கும். 4000 பதிவுகள் பெருமையான விஷயம். தொடரட்டும் உங்கள் இந்த நற்பணி!!!

  2. அருமையான தமிழ்ப்பணி. உங்கள் ஊக்கத்தால் வளரும் எழுத்தாளர்கள் பலர். தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துகள்.

Comments are closed.