பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?/~ நியாண்டர் செல்வன்

ஒரு பக்கத்தில் முடிக்கவேண்டிய மேட்டருக்கு ஒரு புத்தகமே எழுதினால் எப்படி இருக்கும்?

இப்படி புஸ்தகங்களை எழுதிவிட்டு “யாருமே புஸ்தகம் வாங்குவதில்லை” என புலம்பினால் எப்படி வாங்குவார்கள்?

அஞ்சு செகண்ட் ரூல் (5-second rule) என ஒரு புஸ்தகம். அதாவது ஒத்திபோடுதலை தவிர்க்க ஒரு ஐடியா சொல்கிறார்

எக்சர்ஸை செய்ய காலையில் எழ சோம்பேறிதனமா இருக்கா? கவலையே படவேண்டாம். “5,4,3,2,1 சொல்லுங்க. சொல்லிட்டு எழுந்து எக்சர்சைஸ் பண்ணுங்க..”

இதான் தீம். இதை ஒரு 231 பக்க புஸ்தகமா எழுதி, ரூ 850க்கு விற்றால் எப்படி இருக்கும்?

இதே ரூலை 231 பக்கமும் வித,விதமா எழுதினதை படிக்கையில் கண்ணுல ரத்தமா கொட்டுது. ஆனால் விடுவெனா பார்னு எழுதி விற்று இதன் எழுத்தாளர் மில்லியனர் ஆகிவிட்டார். வலைதளம், பாட்காஸ்டிங், அஞ்சு செகண்ட் ரூல் வலைதளம், பணம் கட்டி கேட்கும் ஸ்பீச்கள் என கலக்கிகிட்டு இருக்கார்

பணக்காரன் பின்னாடி பத்துபேர், பைத்தியகாரன் பின்னாடியும் பத்துப்பேர்

பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?