பெயரில் என்ன இருக்கிறது? அல்லது பெயரில் என்னதான் இல்லை?/எம்.டி.முத்துக்குமாரசாமி

தாவோ கவிஞர்களின் பெயர்கள் ஏன் சுவாங் மகாங், இட்சூ புட்சூ என்றெல்லாம் இருக்கின்றன என நண்பொருவர் கேட்டார். நான் அவருக்கு
————
தாவோ கவிஞர்களின் பெயர்கள் ஏன் சுவாங் மகாங், இட்சூ புட்சூ என்றெல்லாம் இருக்கின்றன என நண்பொருவர் கேட்டார். நான் அவருக்கு ஓஷோவின் குட்டிக்கதை ஒன்றைச் சொன்னேன். தாவோ கவிஞர்கள் பிறந்தபோது அவர்களுடைய பெற்றோர் பீங்கான் கிண்ணங்களை உயரத் தூக்கிப் போட்டு உடைப்பார்களாம் அவை உடையும் போது என்ன சப்தம் உண்டாகிறதோ அதையே தாவோ கவிஞர்களின் பெயர்களாக வைத்துவிடுவார்களாம். இதுவரை ஓஷோ கதை. இனி வருவது சொந்தக் கைச்சரக்கு. பீங்கான் கிண்ணங்கள் உடைந்த பின் உடைத்துவிட்டோமே என்று பெற்றோர்கள் உச்சுக்கொட்டினார்களில்லையா அந்த சப்தங்களும் தாவோ கவிஞர்களின் பெயர்களாக நிலைபெற்றுவிட்டன.