
தற்போது முகநூலில் நான் அதிகமாக இயங்குவதில்லை. ஆனால் பாலியல் வன்முறை என்று வரும்போது மௌனம் சாதிப்பவர்களும் குற்றவாளிகளே. அதனால்தான் இந்தப் பதிவு. என் நண்பர் ஒருவர் தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து விலகி இருப்பதற்கு கீழ்க்கண்ட நீதிவெண்பா செய்யுளைக் கூறுவார்.
கொம்புளதற்கு ஐந்து ; குதிரைக்குப் பத்துமுழம் ;
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே ; வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி
(நீதிவெண்பா)
இப்போது வெளியே வந்துகொண்டிருக்கும் பாலியல் வன்முறைச் செய்திகளைக் கேட்கும்போது இந்த அறிவுரை எவ்வளவு முக்கியமானது என்று தெரிகிறது. தமுஎகச கண்டன அறிக்கை அனுப்பலாம், உள் கமிட்டி அமைத்து விசாரித்துத் ”தகுந்த” தண்டனை தரலாம் தராமலும் போகலாம், ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளர் என்ற முறையில் கோணங்கி, முருகபூபதி, மணல்வீடு ஹரிகிருஷ்ணன் இவர்களைக் கண்டனம் செய்கிறேன். பாலியல் வன்முறையை, இறந்துபோன எழுத்தாளர்களின் பெயர்களைக் கூறி சாதாரண விஷயமாக்கி பூசிமெழுக முயற்சிக்கும் அனைத்துக் கயவர்களையும் கண்டனம் செய்கிறேன். அவர்கள் கூறும் எந்த விளக்கங்களையும் நான் கேட்கத் தயாராக இல்லை. இந்த விஷயத்தில் நான் இதில் காயப்பட்டவர்களுடனேயே நிற்கிறேன். நான் இதில் தனியாக இல்லை. என்னுடன் பிரேமா ரேவதி, பெருந்தேவி, கீதா நாராயணன் மற்றும் பல நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.
