
மதில் மேலமரும்
வானில் தாவும்
கிளைகள்
பற்றும்
திசைகள்
மாற்றும்
பற்கள்
காட்டும்
பதற
வைக்கும்
சகதியில்
வீழும்
நதியில்
அளையும்
பழையன
மெல்லும்
கணங்கள்
கொல்லும்
எங்கோ
ஒருவன்
வித்தைகள்
கற்றவன்
கயிற்றில் கட்ட
வயிற்றைக்
குறுக்கும்
கண்கள் மூடிக்
கால்மாட்டருகில்
வாலைச் சுருட்டி
வாளாவிருக்கும்.
