ஆசாரக் கோவை/வளவ.துரையன்

பாடல் 21 : உண்ணும் போது

விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.

பொருள் :

என்றும் ஒழுக்கம் தவறாதவர்கள் அதிதி என்ற விருந்தினர் வீட்டிலுள்ள வயதானவர்கள், பசு, பறவைகள், குழந்தைகள் ஆகியோருக்கு உணவு கொடுத்த பின்னரே தாங்கள் உண்பார்கள்.

பாடல் 22 : உண்ணும் போது
ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல
முகட்டு வழியூண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
முகட்டு வழிகட்டிற் பாடு.

பொருள் :

முன்சொன்ன கிழக்கு முகமாக அமர்ந்து உண்ணமுடியவில்லை என்றால் மற்ற திசைகளை நோக்கியும் உண்ணலாம். வாயிற்படிக்கு நேராக இருந்து உண்ணுதல் நல்லது என்று புகழ்ந்தார்கள்; வாயிற்படிக்கு நேராக கட்டிலிட்டுப் படுத்தல் நல்லதல்ல என்று இகழ்ந்தார்கள் அறம் அறிந்தவர்கள்.

பாடல் 23 : உண்ணும் போது

கிடந்துண்ணார்; நின்றுண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிகவுண்ணார்; கட்டின்மேல் உண்ணார்;
இறந்தொன்றும் தின்னற்க நின்று.

பொருள் :

படுத்துக் கொண்டும் நின்று கொண்டும் திறந்த வெளியிலும் உண்ணக்கூடாது. ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமாக உண்ணுதலும் கூடாது. கட்டில் மேல் அமர்ந்தும் உண்ணக்கூடாது. நெறி இல்லாமல் அளவு கடந்து யாதொன்றும் நின்றுகொண்டு தின்னல் ஆகாது.

ஆசாரக் கோவை

வளவ.துரையன்