ஞானக் குரங்கு…/முருகு

இந்தப் பழம்
ஒன்று போதும்…

இந்தக் கணம்
இனிமை தான் என…

இன்புற்றிருக்கும்
ஞானக் குரங்கே…

போதுமென்ற மனம் கொண்ட…
பொன்னான உன் மனத்தை…

இன்னும் வேணுமெனும்…
இழிமனித மன உவமையாக…

குரங்கு மனம் என்பது
குற்றம் தானே மனிதர்களே…