
என்பா 1
மரபுவழி இலக்கண வெண்பா இருக்க,
மரபைச் சிதைக்கின்ற என்பா எதற்கு?
சிறகை முறித்துவிட்டு பறக்க இயலுமா?
செந்தமிழ்க்கு செய்வோம் சிறப்பு!
என்பா 2
வேட்டியைத் தலையிலும் துண்டை இடுப்பிலும்
மாற்றிக் கட்டும் புதுமை எளிதுதான்!
மடமை என்றிதை உலகம் பழிக்கும்!
செந்தமிழ்க்கு செய்வோம் சிறப்பு.
