பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்/தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்
தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
கூடவே டைஷோவின் ஜப்பானிய மரச்செதுக்கு ஓவியம் “வசந்தம்’ அல்லது ‘சிவப்பு கிமோனோ’
11
என்னுடைய புதிய உடை
இன்றைய காலை
வேறொருவர்
12
வயல்கள், மலைகள்
ஹுபாக்குவில் – இன்னும்
ஒன்பது நாளில் வசந்தம்
13
ஆண்டுதோறும்
குரங்கின் முகமூடி
குரங்கை வெளிப்படுத்துகிறது
14
புதுவருடம்- பாஷோ டோயெசியின்
மடாலயம்
ஹைக்கூக்களால் சலசலக்கிறது
15
புதுவருடம்
ஆழ்சிந்தனை உணர்வு
தாமதமான இலையுதிர்காலத்திலிருந்து வருவது
16
வசந்தமே வா- புது வருடத்தின்
சுரைக்காய்கள் -போன வருடத்தின்
அரிசியால் திணிக்கப்பட்டிருக்கின்றன
17
குளம்புகளை மண்ணில் புதைத்துக் கிளறி
தெய்வீக வெள்ளைக்குதிரை
புது வருடத்தை வரவேற்கிறது
18
வசந்த இரவு
செர்ரி
வைகறையின் பூத்திரள்
19
வசந்தத்தோடு
வைக்கோல் மேலங்கிகள் அணிந்து
துறவிகள் ஒருவருக்கொருவர் முகமன் கூறுகின்றனர்
20
வசந்தத்தின் வெளியேற்றம்
பறவைகளின் கிறீச்சிடல்
மீன் கண்கள் கண்ணீரைச் சிமிட்டுகின்றன

One Comment on “பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்/தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி”

Comments are closed.