
உன்னைச் சொல்லியென்ன
உனக்குப் பட்டமளித்த
பல்கலைக் கழகத்தைச் சொல்ல வேண்டும்.
தலைச்சுற்று
கைகால் களைப்பு
மூச்சுமுட்டு
நெஞ்சுவலி
என்றெல்லாம்
எடுத்தெடுத்துச்
சொன்னேனே!
சொல்லியும்
நீயோ
ஓன்றுமில்லை
என்று சொல்லி
விட்டு விட்டு
மதுரம் பூசிய
மாத்திரை தந்தாய்
நானும்
ஒன்று விடாமல்
தின்று விட்டு
உன்னிடமே
சரண்புகுந்தேன்
இப்பொழுதோ
ஒரே அடியாள்
குப்புறக் கவிழ்ந்து
பரவாயில்லை
படமெடுத்து
பரிசோதித்து
பரிகாரம் காணலாமென்று
நீ
நா கூசாமல் கூறுகின்றாய்
உன்னைச் சொல்லியென்ன
உனக்குப் பட்டமளித்த
பல்கலைக் கழகத்தை
சொல்ல வேண்டும்
