கால் ரூபாய் நாணயம்/நாகேந்திர புண்டரிக்

தமிழாக்கம்- கிருஷாங்கினி

நீண்ட நாட்கள்வரை என்னுடைய
சட்டையில் பையிலிருப்பதனாலான
எந்த விதமானசிறப்புப் பொருளும்
இருந்ததில்லை
பணத்திற்கு பதிலாக அதில்
வைத்திருந்தேன் நிரப்பி
துக்கங்களை
மேலும் துக்கங்களும்
அத்தனை அதிகமாக ஆகிவிட்டன
அவற்றிற்கு முன்னதாக
அனைத்து இன்பங்களும் திரிந்து போயின
அதனால் துக்கங்களை விடவும்
அழகான பெண்களும்
உருவாகி விட்டனர்
அதனால், எனது துக்கங்களை
எப்போதும் நான்
கடன் வாங்கிக்கொண்டே இருந்தேன்
என் ஊரில் இருக்கிறது
ஒரு நதி
எனது பிறப்பிலிருந்தே
உறவு அந்த நதியுடன்
வெறும் நீரோடானது அல்ல
அது கற்களோடானது
அந்தக் கல்லில் நான்
நீண்ட நேரம் துணிகளை
அடித்துத் துவைத்துக்கொண்டே இருப்பேன்

துக்கம் நிறைந்த இறந்த காலங்களில்
என்னுடைய உறவு மிக அதிகமான
அந்த மனிதர்களோடு
இருந்தது
அவர்கள் நாள் முழுவதும்
சூரியனுடன் உறவாடிக்கொண்டு
பொறுக்கிக் கொண்டிருப்பார்கள்
என் துக்கங்களை
சூரியனோடு உறவாடிக்கொண்டே
துக்கங்களைப் பொறுக்கும் கலையை
நான் கற்றேன் அவர்களிடமிருந்து
ஒவ்வொரு மனிதனின் தலையிலும்
இருக்கவே இருக்கிறது என்னவோ
இத்தனை இடம்
அவற்றில் சிறிது நேரம்
தங்கி இளைப்பாற முடியும்
நாளைக்கு என சிலவற்றைக்
கேட்டும் கொள்ளலாம்
அவன் அவற்றிடம்
நான் பிறக்கும் போது
வீட்டில் இல்லை அப்பா
எனச் சொல்கிறார்கள்
அதனால் வாழ்நாளின் இன்பம்
குறைகிறது கொஞ்சம்
எனது பிறப்பிலிருந்தே
பூஜை செய்ய வந்த பண்டிதர்கள்
அவர்களுக்குக் கிடைத்த

கால் ரூபாயை அப்படியே
விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்
பூஜைத் தட்டில்
நீண்ட நாட்கள் வரை நான்
என் துன்பங்களை அந்தக்
கால்ரூபாய்களுடன்
எக்ஸேஞ்ச் செய்து கொண்டிருந்தேன்
அதன் காரணமாகவே
எனக்கு எல்லாக் காசுகளைவிடவும்
கால்ரூபாய் பிடித்தமானது
ஏனெனில் அவையே
எனக்குக் கிடைத்தது எல்லோரிடமிருந்தும்
அதிகமாக கிடைத்தது
எனக்கு துக்கம் வந்தது
எல்லாவற்றிகும் முன்னதாக
கால் ரூபாய் நாணயங்களே
வந்தன என் பைக்குள்
எது வேண்டுமானாலும்
சொல்லிக்கொள்ளுங்கள்
நீங்கள்
இந்த கால்ரூபாய்களே
நமது நூற்றாண்டுகாலத்
தொடர்பின் அடையாளம்
அது நின்றுபோனபோது
நாம் ஏழையாவதற்கு அதுவே

சிறந்த காட்சியாகும்.