
தேரடித் தெரு
ஒரு வீட்டில்
திருடன் புகுந்துவிட்டான்
டீவியில் ஏதோ சீரியல் வீட்டார்
பார்த்துக் கொண்டிருந்தார்
திருடன் புகும்போது யாரும்
அவனைப் பார்க்கவில்லை
உள்ளே போன திருடன்
கைக்குக் கிடைத்த பொருள்களை
வாரிப் பெரிய பை ஒன்றில்
அடைத்துக் கொண்டு
புறப்படும் போது
குட்டிப் பெண் ஒன்று
கூக்குரல் இட்டது
பிள்ளையார் பொம்மையை
அங்கிள் எடுத்துக் கொண்டு
போகிறார் என்று
எல்லோருமாய்ச் சேர்ந்து
திருடனைப் பிடித்தனர்
திருடன் அடிப்பட்டான்
தரையில் தள்ளப்பட்டுச்
கால்களால் உதைபட்டான்
