கிதாப்கஞ்ச் கவிதை / தமிழில் : வசந்ததீபன்

ஒரு அழிந்து போன மொழியில்
பேசுகிறாள் சின்னஞ்சிறு சிறுமி
அதில்
மனிதர்களின் பெயர்கள் இருக்கின்றன
உணவுகளின் பெயர்கள் இருக்கின்றன
உயிர்களின் பெயர்கள் இருக்கின்றன
உணர்வுகளின் பெயர்கள் இருக்கின்றன
அவளின் மொழியில் வெறுப்போடு
இணைந்த எந்தவொரு வார்த்தை இல்லை.

அவள் திட்டுகள் கேட்டும்
அழுகிறாள்
ஆனால் வெறுப்பு காட்டுவதில்லை

நாம் அவளிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம்
அவளுடைய அழிந்த மொழி _
அவள் பள்ளி போகாத வரை
அவள் நமக்கு கற்றுத் தருகிறாள்.

🦀

ஹிந்தியில் : கிதாப்கஞ்ச்

தமிழில் : வசந்ததீபன்

🦀

 

🦀
🦀