மதுராந்தகத்திலிருந்து…/கால சுப்ரமணியம்

மதுராந்தகத்திலிருந்து பத்து கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமப்புற பண்ணைவீட்டில் நான்கு நாட்களாக தங்கல். விரும்பும் தனிமைச் சிறை. பிரமாதமான கிராமச் சமையல். கதையில் பாதி வேலை முடிந்தது. மிகக்கடினமான மீதி வேலை நடந்துகொண்டிருக்கிறது. பத்து ஏக்கர் தென்னை, மாந்தோப்புக்கு இடையில் வீடு. அந்தக் தொட்டிக்குள் தான் காலை மாலைக் குளியல். ஆக்காட்டி பறவையொன்று புள்ளியளவில்

கடைசிக்கு முந்தின படத்தில் தெரிகிறதா பாருங்கள்… கோவிட்டுக்கு முந்தியே இரண்டு வருடங்களாக கோவை, ஊட்டி, ஏற்காடு, சென்னை என்று தங்கி ஓரளவு முழுமையாக்கிய மூன்று

திரைக்கதைகளும் கோவிட்டினால் ஊத்தி மூடப்பட்டுவிட்டன. அதில் ஒரு கதை மீண்டும் துளிர்த்திருக்கிறது. முதல் பாதி டைரக்டர் சொன்ன ஒரு கதை வரியை வளர்த்தெடுத்தது. பின்பாதி நானே சேர்த்தது. ஆனால் இப்போது படப்பிடிப்புக்குத் தயாரான நிலையில் தயாரிப்பாளருக்குக் கதை பிடித்தும் சில இடங்கள் சரியாக வரவில்லை என்று நினைத்து மறுபடியும் கதை அமைத்தவரையே பிடித்து ஒழுங்குபடுத்துங்கள் என்று சொல்லிவிட்டார். எனவே வேறு வழியில்லாமல் என்னை மறுபடியும் அழைத்தனர். இப்போது ஐந்தாறு படங்களின் வெற்றியால் பிரபலமாக உள்ள தயாரிப்பாளரின் பண்ணைவீடு தான் இது. நான் இரண்டாம் பகுதியில் சேர்த்த கதையை டைரக்டரின் பிற கதை ஆலோசகர்கள் கொதறி

எடுத்திருக்கிறார்கள். எனவே அவற்றை மாற்றிவிட்டு மீண்டும் ஒரு கதை இணைப்பை வேறு பக்கத்திலிருந்து பொருத்கிக்காட்டவேண்டும். இதுவரைக்கும் ஒரு பைசா வந்ததில்லை. வற்புறுத்திக் கேட்டு முன்னதாகவே பெறாவிட்டால் ஏமாறவேண்டியதுதான் என்று இத்துறை அநுபவஸ்தர்கள் சொல்லிவருகிறார்கள். நான் அதில் அக்கறை எடுக்கவில்லை. திரைக்கதையை முடித்துக் காட்டி ஓகே செய்தால் மட்டுமே ஏதையாவது கேட்டுப் பெறலாம். எவ்வளவு காலம் ஈடுபட்டாலும் ஒரு திரைக்கதை படப்பிடிப்பில் காலடி வைக்கும் வரை உறுதியில்லை (படப்பிடிப்பு முடியும் வரை உறுதியில்லை, முடிந்தும் வெளியீடு பெறாதவரை உறுதியில்லை என்றெல்லாமும் தடைகள் எழும்) என்ற நிலையில் இந்தத் திரைக்கதையில் நான் “‘பணி” செய்வதை வெளிப்படுத்தவே கூடாது என்றிருந்தேன். இப்போதும் இதையும் வெளிப்படுத்தியிருக்கக்கூடாது. முக்கால் கிணறுதான் தாண்டப்பட்டுள்ளது….

One Comment on “மதுராந்தகத்திலிருந்து…/கால சுப்ரமணியம்”

Comments are closed.