
தோற்க மறுத்தால் வெற்றி துலங்கும்
வேர்க்க உழைத்தால்
வாழ்வு தொடங்கும்
பார்க்க மறுத்தால்
கண்ணும் வெறுக்கும்
இன்னலே வாழ்க்கை ஆகுமோ?
ஊழித்தீயை நீயேன்
ஊதி விடுகிறாய்
உதவும் இயற்கைக்கு
உதவ மறுக்கிறாய்
வாழும்வகை அறியாது
வாதம் செய்கிறாய்
இன்னலே வாழ்க்கை ஆகுமோ?
இலத்தூர் கி.சங்கர நாராயணன்
இன்று காலை
பலத்த மழை
இடியும் மின்னலும்
இல்லா மழை
இஞ்சித் தேனீர்
இருந்தால் நலமே
அஞ்சி வாழ்ந்தால் அவலம்.
இலத்தூர் கி.சங்கர நாராயணன்
இன்று காலை பலத்த மழை
இசையாய் பின்னணி சேர்த்த
மழை
காய்ந்த துணியை
நனைத்த மழை
கடுப்பின்றி வாழப் பழகு.
இலத்தூர் கி.சங்கர நாராயணன்

மன மகிழ்ச்சியோடு நன்றி தெரிவிக்கிறேன்.
இலத்தூர் கி.சங்கரநாராயணன்.
அருமை!
நெருங்கிடும் நண்பர்
நேசமாய் உதவுவார்
நற்செயல் கண்டவர்
நாடி வந்திடுவார்
உழைப்பின் வெற்றியை
ஊர்க்கு உறைத்திடுவார்
இன்னலே வாழ்க்கை ஆகுமோ