
யானைகளை
புலவர்களுக்கு
பரிசளித்த அரசனின் நோக்கம்
புலவனை தண்டிப்பதாகத்தான்
இருக்கவேண்டும்
ஊர்வலம் போக
யானைதான் வேண்டும் என்றால்
யானைக்கு
கொஞ்சம் செலவாகத்தான் செய்ய்யும்
செலவு குறைந்த
பிராணிகளே போதும் என்றால்
திருவிழா எப்படிச் சோபிக்கும்?
நான் சர்க்கஸில்
ஒரு யானையாக இருக்கிறேன்
யானையைக் கட்டி
தீனி போடமுடியவில்லை என்று
அலுத்துக்கொள்கிறார்கள்
யானைக்கும்
யானையாக
எப்படி இல்லாமலிருப்பது
என்று பிடிபடவேயில்லை
22.3.2023
இரவு 11.06
