நீயெல்லாம் ஒரு மனுஷனா?/ரேவதி பாலு

மைக்ரோ கதை

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாள் அந்தப் பெண். முதுகில்
ஒரு கனமான பை. அவளையொட்டி ஒரு பைக் மெதுவாக வந்ததை பின்னால் நடந்து
வந்து கொண்டிருந்த ஸ்வப்னா கவனித்தாள். சடாரென்று அந்தப் பெண்ணின் கழுத்திலிருந்த செயினை பக்கத்தில் வந்த பைக்காரன் இழுக்க முயல்வதைப் பார்த்த ஸ்வப்னா ஒரு கணம் திடுக்கிட்டுப் போனாள். சட்டென்று சுதாரித்துக் கொண்டு, சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த கருங்கல் குவியலிலிருந்து ஒரு கை நிறைய கற்களை எடுத்து அந்த பைக்காரன் மேல் ஆக்ரோஷமாக வீசினாள். பயந்து போன அவன் நொடியில் அங்கேயிருந்து காணாமல் போனான்.

பின்னால் நின்று கொண்டு இந்த நிகழ்ச்சியை செல்போனில் வீடியோ
எடுத்துக் கொண்டிருந்த வாலிபனைப் பார்த்ததும் கோபத்தின் உச்சத்தில், “ஏண்டா! ஒன் அக்கா தங்கச்சிக்கு இப்படி நடந்தா அவளைக் காப்பாத்தாம, இப்படித்தான் போட்டோ எடுப்பியா?நீயெல்லாம் ஒரு மனுஷனா?” என்று கத்தினாள் ஸ்வப்னா.