மேலேறிச்செல்கிறது பல்லி/செ.புனிதஜோதி

அந்தச் சுவரில்
மேலேறிச்செல்கிறது பல்லி
இரையொன்றே நோக்கு.

ஒருமுறைகூட
அந்தச் சுவரை
அன்பால் வருடியதோ
அதன் தேவைகளை
உணர்ந்ததேயில்லை.

தன்னைத் தாங்கிப்பிடிப்பதே
அந்த சுவரின்
பெரும்பாக்கியமாய்
பெருமிதத்தோடு
பயணிக்கிறது.

சாபகேடென்று
சத்தமாய் ஒலிக்க முடியாமல்
உறைந்துபோனது
ஊமைச் சுவர்