
பார்க்கவே அருவெறுப்பு
பல்லிகளின் அட்டகாசம்.
பெருகிப் போச்சு.
குழந்தைகள் முறையிட்டனர்
பார்க்கவே அருவெறுப்பு
பல்லிகளின் அட்டகாசம்.
பெருகிப் போச்சு.
குழந்தைகள் முறையிட்டனர்.
பல்லி வேட்டைக்குப் புறப்பட்டேன்.
பல்லிகள் வாலை மட்டும் அறுத்துக்கொண்டு
உயிர்தப்பி ஒளிந்து கொண்டன.
துடிக்கிற வால்கள் தரையில் கிடக்க
பல்லிகள் ஒழிந்ததாய்
குழந்தைகள் மகிழ்ந்தனர்.
வாலின்றி மொட்டையாய்
இன்னும் அருவெறுப்பாய்
பல்லிகள் நாளை திரியும்.
ஆயாசமாயிருந்தது எனக்கு.
.( ஆளுக்கொரு வானம் தொகுப்பிலிருந்து.-மீள் பதிவு.)
