
.
இந்தப்பல்லி எதற்கெடுத்தாலும் கத்தித்தொலைக்கிறது….
நல்லதோ…கெட்டதோ எதோவென்று ஓடிக்கொண்டுதான் இருக்கும்
மனதில்…
நினைப்பை அங்கிகரிப்பதுபோல….இது
குரல் எழுப்பும்போது பகீரென்கிறது சிலநேரங்களில்…
அம்மாதான் பல்லி குரல் எழுப்பும்போது பதில் குரல் எழுப்புவாள் சகுனத்தின் பொருட்டு…

அப்பா திசையைப் பொருத்து
பலன் என்பார்…
தம்பி அது துணைதேடி குரல்எழுப்புகிறது என்பான்
கேலியாய்….
உள்ளே வளர்ந்த நம்பிக்கை
அதன் ஒவ்வொரு குரலுக்கும்
காரணம் தேடுகிறது…பகுத்தறிவை
ஒதுக்கிவைத்துவிட்டு.
எப்போதாவது எனக்கு பிடித்தது நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு
பல்லி குரலுக்காக காத்திருப்பது உண்டு….
அன்று மட்டும் வீடு மௌனமாய் இருக்கும் என்
எண்ணத்தை மறுப்பதுபோல.
