கோடையும் பாட்டியும்/ எஸ் வி வேணுகோபாலன்

வயதான காலத்தில்
கல் பொறுக்குகிறேன் என
முறத்தில் வைத்து
நோம்பி நோம்பித்
திரும்பத் திரும்பக்
கலந்து நீக்கிக் கலந்து விதியை நொந்து கொள்வது போலவே

குளிர்விக்கிறேன் என
சொல்லிக் கொண்டே
அனலை மேலும் பெருக்கிச் சுழன்று இன்னும் வெக்கையை ஊட்டிச்
சுழன்று கொண்டிருக்கிறது மின் விசிறி!

7 Comments on “கோடையும் பாட்டியும்/ எஸ் வி வேணுகோபாலன்”

  1. வெக்கையை கூட்டி என இருந்திருக்கலாம். ஊட்டி என்று இருந்தால் குளிர்ச்சியை குறித்து விடுகிறது.
    நான் என்றும் உங்கள் எழுத்துக்களின் விசிறி!

  2. கோடை கால கவிதை சிறப்பு
    இரண்டு விசயங்களை நினைவூட்டுகிறது.
    குளிர் சாதனப் பெட்டியும் வேறு பிரச்சினைகளை உண்டாக்குகின்றன.

  3. வெக்கையைக் கூட்டி என்றிருந்திருக்கலாம். ஊட்டி என்றால் குளிர்ச்சி தானாகவே வந்து விடுகிறது.

    எழுத்துப்பணியில் என்றும் சுழன்று கொண்டிருக்கும் உங்களின் விசிறி நான்.

  4. எரிகிற தீயில் எண்ண என்பது போன்ற தொனியில் தான் ஊட்டி என்ற வார்த்தை என்று நினைக்கிறேன்.கவிதை அருமை

  5. பாட்டி அரிசியில் மட்டுமா கல் நீக்குகிறாள்.
    வீட்டிலும் கள்ளம் கபடும் நீக்கவும் முயற்சிக்கிறாள்.
    மின்விசிறியைப் போலே!
    நல்ல கவிதை 👏🏼👏🏼👏🏼

Comments are closed.