இரண்டு வரிக் கவிதைகள்/அழகியசிங்கர்

  1. அவன் பேசாமலிருந்தான்.
    எல்லோரும் திட்டிவிட்டுச்
    சென்றார்கள்.
  2. நகுலனுடன் சேர்ந்து நகுலன் புத்தகம் போட்டான்.
    ஆனால் ஒரு புத்தகம் கூட விற்கவில்லை

3.அவள் ஆட்டோவில் வந்து இறங்கினாள்.
அவள் வீட்டிற்குள் ஓடினாள்

  1. அவன் விரட்ட விரட்ட
    அந்த நாய் அவனைச் சுற்றி சுற்றி வந்தது.
  2. காதல் என்றால் என்ன
    என்று கேட்டான்.
    அவனுக்கு வயது 70.
    அவளுக்கு 65.