
கோடை வெயில்
புரட்டிப்போட்ட வயல்
நிலம் தீண்ட தாக விரல்களோடு
கண்மாயில் அலைந்து திரியும் பரிதி
ஊற்றப்படும் நீரின் அவஸ்தை
செடிக்கும் புரிகிறது
காய்க்கும் காலம் வரை காத்திருக்க
புரியவில்லை நட்டவனுக்கு
நீரும் விஷமாகிவிடும்
வயிறு நிறைந்தபின் உண்பது அன்ன
வாழும் வாழ்க்கையில்
தன்னைத் தவிர
பொருட்படுத்த ஒன்றுமில்லை
என்கிறாய்
எதுவும் உன்னைப் பொருட்படுத்தவில்லை
என்பதை எப்போது நம்பப் போகிறாய்
என்று தெரியவில்லை எனக்கு.
-
