
இராமனை ஸ்ரீராம மூர்த்தியை – நம்
இதயம் உணர்ந்தே அறியணும்
இராவண எண்ணத்தை அழிக்கவே – தினம்
இராம நாமம் துதிக்கணும்
தாய்மொழி மேலில்லை என்றவன் – தன்
தர்ம நெறியைக் கொள்ளணும்
வாய்மொழி சத்தியமாய் வாழ்ந்தவன் – அதை
மனத்தில் இருத்தி நடக்கணும்
நட்பிலே குலசாதி வென்றவன் – அதை
நடப்பில் நாமும் சேர்க்கணும்
மட்டிலா அன்பொன்றால் நின்றவன் – அதை
வசமாய்க் கொண்டே இரங்கணும்
பட்டமும் பதவிகளும் துறந்தவன் – அதைப்
படித்தே நாமும் சிறக்கணும்
இட்டமாய்த் துன்பத்தை ஏற்கணும் – என்ற
இராம கதையும் புரியணும்.
(இன்று(30.03.2023) ஸ்ரீராம நவமி தினம்)
