வலைப் பூ/மீனாட்சி சுந்தரமூர்த்தி

சிலந்திகள் உழைப்பால்
பின்னிய
வலைப்பூவோ,முல்லைச் சரம்
தொடுக்க
நங்கை ஒருத்தி எடுத்த
நூற்கண்டோ,
புதுப்பெண் இட்ட முதற்
கோலமோ,
பனித்துளிகள் குழுமம்
பகலவனை
மிரட்ட திரட்டிய பந்தோ!
மழலை
எழுதிய முதல் எழுத்தோ நீ
சொல் பூவே !!!