செ.புனிதஜோதிகவிதை

காலம்
பேருந்தில்
ஏறிக்கொண்டு
சென்று
கொண்டிருக்கிறது

வழிநெடுக்க வரும்
வசந்தத்தை
இலைஉதிர்வை
சேமித்து வைக்காமல்
கடந்து கொண்டேயிருக்கிறது

ஏக்கத்தோடு
அத்தனையும்
பார்க்க.

கையசைப்பைக் கூட நிகழ்த்தாமல்
பயணம் மட்டும்
நோக்கமென
பயணிக்க கற்றிருக்கிறது