குட்டிக் கவிதைகள்/பி.ஆர்.கிரிஜா

குடுகுடுப்பைக்காரன்
கையிலோ
வண்ண ஆடைகள்
வீட்டில் சேய் அம்மணம் !


கட்டம் கட்டமாய்
கட்டெறும்பின்
அணி வகுப்பு
அட ! ரங்கோலி !

மனமெனும் நாடக மேடையில்
அலங்கரிப்பதோ
ஆயிரம் வேடங்கள்

ஓலைக் குடிசையில்
கதிரவன் பிரவேசம்
குடிசை வாசியின்
மனதினில் காரிருள் !

காலச் சுழற்சியில்
சுழலும் பம்பரங்கள்
காலம் உள்ள வரை
சுழலும் !


மழைக்காக
நிழற் குடையில்
ஒதுங்கினேன்
நாய்க்குடை
எனைப் பார்த்து
நகைத்தது !