தொல்காப்பியமும் பிரதீபனும்/பிரதீபன்

அண்மையில் நானும் என் மனைவியும் ஒரு திருமணத்திற்குச்
சென்றிருந்தோம். மணமகன்
எங்களுக்கு  உறவினன்;  தமிழறிந்தவன்.
                      மணமேடையில் ஒவ்வொரு சடங்காக நடந்து இறுதியில் திருப்பூட்டும் (தாலிகட்டுதல்) முடிந்தது. உறவினரும், நண்பர்களும் மேடைக்குச் சென்று மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்லிப் பரிசளித்துவிட்டு வந்தனர். எங்கள் முறை வந்ததும்
நானும், என் மனைவியும் சென்று
பரிசளிக்கும் போது மணமக்கள்
எங்கள் கால்களில் விழுந்து வணங்கினர். எனக்கு மூளையில்
ஒரு மின்னல் வெட்டியது.

     “தொல்காப்பிய நூற்பா ஒன்றில்

சற்றே மாற்றம் செய்து,

“வழிபடு தெய்வம் நிற்புறம் காப்ப

பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து

பொலிக பொலிக என்றும்  பொலிக
என்று வாழ்த்தினேன்.
தமிழறிந்தவன் என்பதால் மணமகனும், வித்தியாசமான வாழ்த்து என்பதால் மணமகளும், சுற்றியிருந்தவர்களும் மகிழ்ந்தனர்.
            மேடையை விட்டு இறங்கும்போது  “தொல்காப்பியரும், பிரதீபனும்
சேர்ந்து மணமக்களை வாழ்த்திவிட்டீர்கள் என்றார் என் மனைவி. சிரித்துக் கொண்டேன்.

                      – பிரதீபன்