வெறுமை/ஹிந்தியில் : பல்ஜித் கர்வால் ‘பாரதி’           

தமிழில் : வசந்ததீபன்

தினமும்

காலையில் எழுகிறேன்
எனது தனிமையுடன்.

சூரியன் அதேவாக இருக்கிறது,
வெப்பம் அதேவாக இருக்கிறது அதில்
மலர் அதேவாக இருக்கிறது,
மணம் அதேவாக இருக்கிறது
அதில்
சந்திரன் அதேவாக இருக்கிறது,  குளிர்ச்சி அதேவாக இருக்கிறது அதில்
நதி அதேவாக இருக்கிறது,
வேகம் அதேவாக இருக்கிறது அதில். 
ஆனால்,
இவை எல்லாம் இப்போது 

என்னுடைய எந்த காரியத்திற்கு ? 

எப்பொழுது __

நீ இல்லை,

உன்னுடைய நேசம் இல்லை என்னிடம். .