ம.சக்திவேலாயுதம் கவிதை

கடைசி வெள்ளி
பிறையோடும்
புனித வெள்ளி
வேலோடும்
நோன்பு வெள்ளி
சிலுவையோடும்
‘நாமெல்லோரும் ஒருவர்தானே’
என்று பேசிக்கொள்கின்றன
வாழ்க்கை மரத்தில்
ஒரே இறைபுள்ளியில்!