மன்னிப்பு /ஆர் வத்ஸலா

மன்னிப்பின் சிகரம்
தன்னை சிலுவையில்
அறைந்தவர்களுக்காக
இறைவனை வேண்டினார்
“அவர்களை மன்னியுங்கள் பிதாவே
அவர்கள் என்ன செய்கிறார்கள்
என அவர்களுக்குத்
தெரியவில்லை”

மன்னிக்கக் கற்போம்
தவறு செய்பவர்களுக்காக
இல்லாவிட்டாலும்
நமது விடுதலைக்காக