
ஒருதலையாகவே
இருந்துவிட்டுப்
போகட்டும்…
அதனால் என்ன?
நான் பயணிக்கும்
நகரப் பேருந்தில் – என்
மனதைத் தழுவிச் செல்லும்
மல்லிகையின் வாசம்
உன் கூந்தலில் இருந்து
உருவானது என்பதை – என்
நாசி நன்கறியும் வரை
ஏற்படும் மனக் கிளர்ச்சி!
மலர்வனத்தில்
மண்டியிருக்கும்
ஏராளமான
வண்ணமலர்களில்
என்னைப் பார்த்துச் சிரித்து
தலைகவிழும் அந்த
ஒற்றை மலரை – என்
கடைக்கண் நோக்கும்போது
வீசுகின்ற மெல்லியக் காற்று!
எத்தனைக் கோடி
விண்மீன்களிலும்
என்னைப் பார்த்துப்
பிரகாசமாய்க் கண்சிமிட்டி
என்னுடன் நடந்துவரும்
நீ உதிர்ந்து விடாதவரை – என்
விழிகளிலுள்ள பிரகாசம்!
ஒருதலையாகவே
இருந்துவிட்டுப்
போகட்டும்..

இன்கவிதை ! நன்று !
அந்த மலர் மணம் எனக்கும் வீசியது.