உயிர் போகும் வலி/எஸ் வி வேணுகோபாலன்

மிக அண்மையில்
சந்தித்தது –
மிக நெருக்கமாகத்தான் உரையாடியது..
வழக்கம் போலவே
சிரிப்பும் கொண்டாட்டமும் பஞ்சமின்றி

நான்காம் நாள் வந்து விழுகிறது இடி
நண்பர் மறைந்த சேதி

வாழ முயன்று கொண்டே
இருக்கிறேன்
வீடு தேடி வந்து
அவர் உடனிருந்து செலவிட்ட கணங்களுக்குள் –

அடங்கி விடுகிறது என்னுயிர்
அவர் வியந்து பார்த்திருக்க!

6 Comments on “உயிர் போகும் வலி/எஸ் வி வேணுகோபாலன்”

  1. நட்பின் நடவு !
    அன்பின் ஊற்றில்
    வளர்ந்ததாலே!
    வருத்தமாகத்தான் இருக்கிறது!
    வாடும் பயிராய்
    வானம் நோக்க
    கண்கள் கலங்க வாராதோ என்பதைப்போல!

  2. உண்மைதான்.
    நண்பர்கள் மறையும் பொழுது ,
    வழி தரும் நினைவுகள் உயிர் பெற்று விடுகின்றன .
    கடந்து செல்ல முடியாது .
    தப்பித்துச் செல்லவே
    வழிதேடும் மனது .

Comments are closed.