சேவல் தந்த குரல்!/வே.கல்யாணகுமார்

கொக்கரக்கோ சேவல் சத்தம் கூரைமேலே கேட்குது!
குனிந்து கிடக்கும் சனங்களையே எழுந்துவர அழைக்குது!
அக்கரையா எழுப்புது!
அதிகாலை புலருது!
இக்கணத்தே நீ விழித்தால்.. எல்லாம் இங்கே நடக்குது!

சொக்கனுக்கும் சுப்பனுக்கும் சுதந்திரந்தான் கேட்குது!
சுருசுருப்பா எழுந்துவிட்டா.. சகலருக்கும் விடியுது!
திக்குத்திசை தெரியுது! திருப்பம் வரப் போகுது! இக்கணமே எழுந்துவிடு எல்லோருக்கும் நல்லது!