இரண்டு  சாக்பீஸ்/பிரதீபன்

வட்டிலில் கோதுமையைக் காயவைத்துவிட்டு

முற்றத்துத்  திண்ணையில்

வட்டிலில் கோதுமையைக் காயவைத்துவிட்டு

உள்ளே சென்றேன்;

வேறு ஏதோ காரியமாக

வெளியே வந்தவள்

எழுதும் சாக்பீஸால்

வட்டிலைச் சுற்றி என்

குட்டிப் பேத்தி வட்டமிடுவதைக்

கண்டேன்;

அள்ளித் தூக்கி அவளை

முத்தமிட்டேன்,

எறும்புச் சாக்பீஸை

எடுத்து வந்து

வட்டமிட்டுவிட்டு 

உள்ளே சென்றேன்.

                                – .