
கவிதை ஒன்று
தமிழுக்கே முதல் வணக்கம் இனிய
தமிழாலே கொள்வோம்
மன இணக்கம்
அமிழ்தினை விஞ்சி
அருந்தமிழ் கொஞ்சி
தமிழ்ப் புத்தாண்டே வருக.
கவிதை இரண்டு
வேஷம் இல்லா
பழக்கம் தரவே
துவேஷம் இல்லா
தூய்மை தரவே
ஈசன் ஆசான்
பற்றைத் தரவே
தமிழ்ப் புத்தாண்டே வருக.
இலத்தூர் கி.
சங்கரநாராயணன்
