புத்தாண்டு வாழ்த்துகள்/கோ.முத்துசுவாமி

கவிதை ஒன்று

உலகம் செழிக்க, உயிர்கள் உவக்க,
உள்ளும் புறமும் அறிவே ஆள,
கலகம் நீங்கி களிப்பே ஓங்கத்
தமிழ்ப் புத்தாண்டே வருக.

கவிதை இரண்டு

கனி காணக் கனிந்து வரும்;
‘கை நீட்டக்’ காசு தரும்;
மனம் எல்லாம் அமுதூறும்
தமிழ்ப் புத்தாண்டே வருக!

கோ.முத்துசுவாமி