
என்பா- 1
பூனைக்கு மீசை முளைத்து விட்டது,
எலிக்கு இதனால் என்ன பயம்?
நகங்களும் பற்களும் காட்டி வந்தால்,
பதுங்கிக் கொள்ளும் ஓரிடத்தில்!
என்பா- 2
பூனைக்கு மீசை முளைத்து விட்டது!
காய்ச்சிய பாலை கள்ளத் தனமாய்
பாய்ந்து பருக வாயை வைத்ததால்,
மீசையும் வாயும் வெந்துபோனது!
என்பா- 3
“பூனைக்கு மீசை முளைத்து விட்டது!
கடுவன் எனக்கு எப்போது முளைக்கும்?”
வானரம் ஒன்று வனத்தில் கேட்டதும்,
மந்தியதைப் பார்த்து நகைத்தது!
என்பா- 4
பூனைக்கு மீசை முளைத்து விட்டது;
பரணுள் பதுங்கிய எலிகள் எல்லாம்
ஜெர்ரியின் கவனத்திற்கு பற்ற வைத்தது!
எரிந்தது அந்தோ மீசை!
என்பா- 5
“பூனைக்கு மீசை முளைத்து விட்டது;
எனக்கு எப்போது முளைக்கும்?” என்று
காதலியைப் பார்த்து வாலிபன் கேட்டான்!
“அத்தனைக்கும் ஆசைப்படு!” என்றாள்.
என்பா- 6
பூனைக்கு மீசை முளைத்து விட்டது!
பூசை அறையில் நிவேதனத்திற்கு வைத்த
தேன்கலந்த பாலைத் திருடிக் குடித்ததை,
நரைத்தமீசை காட்டிக் கொடுத்தது!
என்பா- 7
பூனைக்கு மீசை முளைத்து விட்டது,
வாயின் சூட்டு வடுக்களை மறைத்தது!
பசுவுடன் சன்மானம் மன்னன் வழங்க,
தெனாலி ராமனுக்கோ ஏககுஷி!
