பூனைக்கு மீசை முளைத்து விட்டது/சசிகலா விஸ்வநாதன்

1.பூனைக்கு மீசை முளைத்து விட்டது;
யானைக்கு கொம்பும் முளைத்து விட்டது!
என்னவென்று புரியாமல் “பர பர”த்து இருந்தன;
இரண்டும் ஒன்று ஆகிவிடுமா?

  1. பூனைக்கு மீசை முளைத்து விட்டது;
    அண்ணனுக்கும் மீசை அரும்பு விட்டது;
    அண்ணன் விடாமல் மீசையை முறுக்க;
    பூனை என்ன செய்யும்?

3.பூனைக்கு மீசை முளைத்து விட்டது.
அனிதா முகத்திலும்
மீசை முளைக்க;
மனது ஆர்ப்பரித்து, மெய் சிலிர்க்க,
மெலிதான பயம் தொற்றியது.

4.பூனைக்கு மீசை முளைத்து விட்டது.
என் அன்னை பவானிக்கும் கூட;
கனகாவிற்கு மருத்துவ படிப்பில்
சேர்க்கை இடம் கிடைக்க.

  1. பூனைக்கு மீசை முளைத்து விட்டது.
    தனக்கு அது கம்பீரத்தை கூட்டியுள்ளதா;
    அழகை எடுத்து
    காட்டுகிறதா; அன்றி;
    சுண்டெலி பயம் கொள்ளுமா?
  2. பூனைக்கு மீசை முளைத்து விட்டது
    என்பா எனக்கு பிடி பட்டது;
    பட்டதை சிறிதாய் சொல்ல;அட!
    எனக்கும் ஒரு மீசை !
  3. பூனைக்கு மீசை முளைத்து விட்டது.
    அமலாவிற்கும் கூட
    மருத்துவர் தயவில்;
    அகிலா என்ன சொல்வாள், என்பதை
    நினைத்து மனம் பூரிக்கிறது.

One Comment on “பூனைக்கு மீசை முளைத்து விட்டது/சசிகலா விஸ்வநாதன்”

Comments are closed.