
என்பா 1
பூனைக்கு மீசை முளைத்து விட்டது
பூச்செடியில் பலா பழுத்து விட்டது
பூம்பூம் மாடு துதிக்கை அசைக்கிறது
கடவுள் சிரிப்போ சிரிப்பு.
என்பா 2
இளநீர் மோர் கானலில் இதமே
இளமை முதுமை வாழ்வின் இயல்பே
இன்பமும் துன்பமும் நிறைவது இடுகாடே
இதுவன்றி வேறில்லை குதம்பாய்!
என்பா 3
வாழைப் பழத்தோல் வழுக்கிடத் துன்பம்
வாயுத் தொல்லை கேலிச் சிரிப்பே
கவிதைக்கு நாளை வரியும் வரலாம்.
இறப்புக்கு உண்டு ஜிஎஸ்டி.
என்பா 4
பாயும் குதிரைக்கு கால்கள் நான்கே
பாயும் மனத்துக்கு கால்கள் ஆயிரம்
பாம்பு காலற்றது விடம் உண்டு
மனிதருள் சிலர் பாம்பே.
என்பா 5
பூனைக்கு மீசை முளைத்து விட்டது
வரைந்த ஓவியன் ரசித்து சிரித்தான்
யானைக்குக் கொம்பு வரைந்து முடித்தான்
காசியில் பாவம் தொலையும்.
