பூனைக்கு மீசை முளைத்துவிட்டது

பூனைக்கு மீசை முளைத்துவிட்டது.
எலி வாசம் உணர ஆரம்பிச்சாச்சு.
எங்கும் சும்மா ஓடுவது இனியில்லை.
வேட்டையின்றி பசி தீராது.

மதுவந்தி


பூனைக்கு மீசை
முளைத்து விட்டது
ஆனையை அடிக்கும் ஆசையும் வந்தது
பானை உருட்டும்
பூனையல்ல நான்
தானே புலம்பித் தவித்தது.

இலத்தூர் கி.சங்கரநாராயணன்


பூனைக்கு மீசை முளைத்து விட்டது
வெள்ளைப் பூனை
முறுக்கிக் காட்டியது
சுள்ளான் எலியும்
சீறுவது ஏனோ?
கருமை டப்பா காலி.

இலத்தூர் கி.சங்கர நாராயணன்


பூனைக்கு மீசை முளைத்து விட்டது
பாசறை நீங்கி
படையோடு கலந்தது
ஜவான் பூனைகள் விறைப்பு நடையில்
பிள்ளைப் பூனை
குரைத்துக் களைத்தது.

கேள்விக்காரன்…